Freitag, 30. November 2012

ஈழநாதம்


சிலாபம் இரணவில பகுதியில் மர்ம விமானம் தரை இறங்கியது 

 சிலாபம், இரணவில பிரதேசத்தில் இனந்தெரியாத விமானம் ஒன்று இன்று (30) அதிகாலை தரையிறங்கியமை அவதானிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இரணவில பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றின் மேலாக சுமார் ஐந்து அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த மர்ம விமானம் பின்னர் பண்ணை நிலத்தில் தரையிறங்கியதனை அந்தப் பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது. அதிகளவு வெளிச்சத்தன்மையுடன் காணப்பட்ட இந்த விமானம் பின்னர் மர்மான முறையில் அங்கிருந்த அகன்று சென்றுள்ளது என்றும் அந்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
aircraft

தென்ஆபிரிக்க துணைத்தூதர் பதவியினை ஏற்கமறுத்த சவேந்திர சில்வா

 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதியான போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தென்னாபிரிக்காவுக்கான இலங்கையின் உதவித் தூதுவராக மஹிந்தரால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு காரணம் பாலித கேகன்னவிற்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையேயான முறுகலே.. தற்போது லெபனானுக்கு அமைதி காப்புபடை ஆலோசகராக சென்றுள்ள போர்க்குற்றவாளி சவேந்திரசில்வா , தென்னாபிரிக்காவுக்குச் செல்லாத நிலையில் மீண்டும் நியூயோர்க் திரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தென்னாபிரிக்க துணைத்துதர் பொறுப்பினை ஏற்க மறுத்து தனது முன்னைய பதவியினையே தருமாறு மஹிந்தருக்கு விண்ணப்பித்துள்ளாராம் சவேந்திர சில்வா.
War crime accused shavendra silva

காயப்பட்ட மாணவர்களை மிரட்டி துரத்தியடித்த சிங்கள புலனாய்வு அடாவடிகள் 

 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்துஅடிதடி நடத்திக் கலைத்தனர். இதன்போது மாணவர்கள், மாணவிகள் பலர் இராணுவத்தினரால் கலைத்துக்கலைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்.. இதில் கடும் காயங்களுக்கு உள்ளான மாணவ, மாணவியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நேற்றுமுன்தினம் மாலையே இவர்கள் வைத்தியசாலையின் 24 இலக்க ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தனர். . மாணவர்கள் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்த மூன்றுபேர் தம்மைப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்து கொண்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர்களை மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. . "நீங்கள் பொலிஸ் வந்து கேட்டால் எங்களுக்கு எதிராகத்தான் றிப்போர்ட் கொடுப்பீர்கள். அப்படிக் கொடுத்தால் நீங்கள் வெளியே நடமாட முடியும்; கவனம்.' என்று கூறி மிரட்டிய புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் மாணவர்களுடனேயே நின்றுள்ளனர். . மாணவர்கள் வைத்திய பரிசோதனை முடிந்த பின்னர், பொலிஸாரிடம் பதிவு செய்வதற்காகக் காத்திருந்தனர். பொலிஸாரும் இரவு 8 மணிக்கு வருவதாக முதலில் தெரிவித்துவிட்டு பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. . வாக்குமூலம் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் மாணவர்களை மிரட்டியதால், மாணவர்கள் வைத்தியசாலைக்குத் தெரிவிக்காமல் இரவு 10:30 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. . இந்த விடயம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருடன் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.



சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனம்; யாழ் மறைமாவட்ட குழு கண்டனம் 

சிங்கள காட்டுமிராண்டி இராணுவத்தின் அடாவடித்தனங்களையும் அரசாங்கத்தின் அத்துமீறல்களையும் யாழ் மறைமாவட்ட நீதிக்கும் சமாதாஅந்த்திற்குமான குழு வன்மையாக கண்டித்துள்ளது. கார்த்திகைத் தீபமேற்றுவதற்குத் தடையெதுவுமில்லையென்றும் இந்துக்கள் தமது சமயக் கடமைகளை எதுவித அச்சமுமின்றி நிறைவேற்றலாம் என்றும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்திருந்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிட்டி விளக்குகளை ஏற்றி கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடினர். . அப்போது பல இடங்களில் இராணுவத்தினர் வந்து விளக்குகளைக் கொளுத்தக்கூடாதென எச்சரித்து, விளக்குகளை அணைத்துள்ளனர். சில இடங்களில் உந்துருளிகளில் வந்த "மர்ம நபர்கள்' சிட்டி விளக்குகளைத் தட்டி வீழ்த்தி அச்சுறுத்தும் பாணியில் செயல்பட்டும் உள்ளனர். . அத்துடன் 27.11.2012 அன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் இராணுவத்தினர் மாணவர், மாணவியரின் விடுதிகளுள் புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளமையையும் பின்னர் 28.11.2012 அன்று காலை அமைதியாகச் சென்ற மாணவர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொண்டமையையும் அங்கு வந்த பத்திரிகையாளர்கள் மீதும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீதும் தாக்குதல் மேற்கொண்டமையையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். . இதுபோன்ற தொடர் செயற்பாடுகள் மக்களின் நல் எண்ணத்தைப் பெற எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. ஏற்கனவே அரசு தாம் முன்னெடுப்பதாகச் சொல்லும் இனப்பிரச்சினைக்கான தீர்வின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் இதுபோன்ற செயற்பாடுகளால் மேலும் உறுதி அடைகின்றன. . தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி ஆட்சியாளரையும் இராணுவத்தையும் பொலிஸாரையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.