Samstag, 29. Dezember 2012

ஈழநாதம்,

தீவகத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு 
abduction
கடந்த புதன்கிழமை காணாமல் யாழ்ப்பாணம், மண்டைத்தீவைச் சேர்ந்த சிறுமி இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரன் சுதந்தினி என்ற நான்கு வயதான சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் சடலம் தற்போது மண்டைதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். 
Abduction
யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு ள்ளார் என அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். நடராஜா கலியுகராஜா என்ற 47 வயதான நபரே வெள்ளிக்கிழமை (28) மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்றும் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்தவர் களே இவரைக் கடத்தினர் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படு கிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசாரணை க்காக அழைப்பு 
flood relief
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணை ஒன்றுக் காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு ஆஜராகுமாறு கேட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை (29) பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு வருமாறு அவர் கேட்கப் பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதால் நாடு திரும்பிய பின்னரே அங்கு செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் மீது குற்றப் புலனா ய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு விசாரணை க்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கைதுகளும் தடுத்து வைப்புக்களும் சட்டத்திற்கு முரணானது: பொன்சேகா

அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தர வுமின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமனானதாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கோ அல்லது எந்தவொரு தரப்புக்கோ இதில் பாகுபாடு இருத்தல் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். . பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் நால்வர் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்ட விவகாரம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். . அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: . யாரேனும் ஒருவரைக் கைதுசெய்வதாக இருந் தால் அந்த நடவடிக்கை, சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். எவ்வித பாகுபாடும் இருத்தலாகாது. ஏனெனில், சட்டம் யாவருக்கும் சமனான தொன்றாகும். . நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லை. எனவே, கைது செய்யப்பட்டவர்களை தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கோ, புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கோ நீதிமன்றத்தின் உத்தர வு அவசியம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு நீதிமன்ற உத்தரவின்றியே மாற்றப்பட்டுள்ளனர். . அப்படியானால், எந்தச் சட்ட த்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது? பாதுகாப்புச் செய லாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அப்பால் சென்று சட்டவிரோதமான முறையில் இந்த விடயத்தில் செயற் பட்டி ருப்பார்களானால் அது கண்டிக்கத்தக்கதாகும். . அதேவேளை, பிரதம் நீதியர சருக்கு எதிரான குற்றப் பிரேரணையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் ஆரம்பம் முதலே கூறிவருகின்றோம். . பழிவாங்கல் நடவடிக்கைக்குப் புறம்பாக இதில் வேறொன்றும் இல்லை என்றும் குறிப்பிட்டார் சரத் பொன்சேகா.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.